பேருந்து நிறுத்தத்தில் பெண் தவறவிட்ட தங்க நகைகள்: துரிதமாக செயல்பட்ட போலீசார்! குவியும் பாராட்டுக்கள்!
woman misses gold jeweler rescued police
தென்காசி, மேல்கட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் திருமலைச்சாமி. இவர் கூலி தொழிலாளி செய்பவர். இவரது மனைவி பத்திரகாளி (வயது 50).
இவர் கடையநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த மோதிரம், கைச்செயின் உள்ளிட்ட 10 கிராம் தங்க நகைகளை மீட்டு ஒரு பையில் வைத்து கடையநல்லூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் தவறி விழுந்த பையை யாரோ மர்ம நபர் எடுத்துச் சென்றனர். பின்னர் இது தொடர்பாக பத்திரகாளி கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சாலையில் கிடந்த பையை வயதான மூதாட்டி ஒருவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த மூதாட்டி இடம் இருந்த பையை மீட்டு அதில் இருந்த தங்க நகைகள் அனைத்தும் சரியாக உள்ளதா என கண்காணித்து பத்ரகாளியிடம் ஒப்படைத்தனர்.
தவறவிட்ட நகையை துரிதமாக செயல்பட்டு 5 நிமிடத்தில் மீட்டுக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
English Summary
woman misses gold jeweler rescued police