யூடியூப் வீடியோ மூலம் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் - விபரீதத்தில் முடிந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


யூடியூப் வீடியோ மூலம் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் - விபரீதத்தில் முடிந்த கொடூரம்.!

தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவருக்கும், புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இதற்கிடையே நிறைமாத கர்ப்பிணியான லோகநாயகி, கணவரிடம் வீட்டிலேயே அதுவும் இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

அதன் படி தம்பதியினர் இருவரும் இயற்கை முறையில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது? என்பது குறித்து 'யூடியூப்பில் வீடியோ பார்த்து வந்தனர். இந்த நிலையில், லோகநாயகிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

உடனே மாதேஷ் 'யூடியூப்' பார்த்து தன்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் லோகநாயகிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது லோகநாயகிக்கு திடீரென அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, சிறிது நேரத்தில் மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து மாதேஷ் லோகநாயகியை மீட்டு போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் லோகநாயகி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மேலும், சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து சம்பவம் தொப்பிடற்பாக மாதேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். யூடியூப் வீடியோ மூலம் பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died after delivery in dhamapuri


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->