திருநெல்வேலி : வீட்டிற்கு வந்த பாம்புடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி : வீட்டிற்கு வந்த பாம்புடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண் - நடந்தது என்ன?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வன்னிகோனந்தல் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன்-சமரசச் செல்வி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த வீட்டிற்கு இதுவரைக்கும் மின்சாரம் வழங்கப்படவில்லை.

இது சம்மந்தமாக மின்வாரியம் மற்றும் வருவாய்த்துறையினரிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், முருகனின்  மூத்தமகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ளார். 

அவர் தேர்விற்கு தயாராக மின் இணைப்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அவரது தாயார் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில், முருகனின் வீட்டில் மின்சாரம் இல்லாததால் விஷ பூச்சிகளும், உயிரினங்களும் வாடிக்கையாக வந்து செல்கின்றன. அந்தவகையில் நேற்று இவர்களின் வீட்டிற்கு கண்ணாடிவிரியன் விஷ பாம்பு  வந்துள்ளது. 

இந்த பாம்பை கையோடு பிடித்துக்கொண்டு சமரச செல்வி ஆட்சியர் அலுவலகத்திற்கு தன் மகளுடன் வந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தீயணைப்புப் படையினர் உடனே விரைந்து வந்து பாம்பைப் பிடுங்கி உள்ளனர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman come to collector office with snake in tirunelveli


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->