குழந்தையுடன் தீக்குழியில் விழுந்த பெண் - மன்னார்குடியில் சோகம்.! - Seithipunal
Seithipunal


குழந்தையுடன் தீக்குழியில் விழுந்த பெண் - மன்னார்குடியில் சோகம்.!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் சத்ய மூர்த்தி மேட்டு தெருவில் ஏழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 18-ந் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. 

இந்த விழாவை முன்னிட்டு பக்தர்கள் திருப்பாற்கடல் குளக்கரையில் இருந்து பால்குடம், காவடி, எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதன் பின்னர் பக்தர்கள் கோவில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

அந்த வகையில், அதே பகுதியைச் சேர்ந்த உமா என்ற பெண் தனது 5 வயதுடைய பேத்தியை இடுப்பில் சுமந்து கொண்டும், தலையில் பால்குடத்துடனும் தீக்குழியில் இறங்கினார்.

அப்போது திடீரென கால் தடுமாறி அந்த பெண், குழந்தையுடன் தீ குழியில் விழுந்தார். இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரையும் அந்த குழந்தையையும் மீட்டனர். 

இதனால், இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கோவில் திருவிழாவில் குழந்தையுடன் பெண் ஒருவர் தீக்குழியில் விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman and child injured in mannargudi for fell fire pit


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->