மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்.. சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி!
Wife gives birth at home Health department shocked
திண்டுக்கல் அருகே வங்கி மேலாளர் ஒருவர், வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி சத்யா உடன் திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி எல்லைநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.மனைவி சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டது.
வலியால் சத்யா துடித்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து தகவல் கொடுத்ததின் பேரில் கொசவப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் , கோபால்பட்டி அரசு மருத்துவ அலுவலர் , டாக்டர் செவிலியர்கள், போலீசார் , வேம்பார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் வீட்டின் முன்பு குவிந்தனர்.அப்போது அவர்கள் தம்பதியினரிடம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேருமாறு வற்புறுத்தி உள்ளனர்.
ஆனால் தம்பதி இருவரும் வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடிக்கொண்டு யாரையும் உள்ளே அனுமதிக்காமல் பிரசவம் பார்த்துள்ளனர் . அப்போது சத்யாவிற்கு அழகான பெண் குழந்தை சுக பிரசவத்தில் பிறந்தது தெரியவந்தது. இதையடுத்து தாயையும், குழந்தையும் டாக்டர்கள் பரிசோதித்து நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் கஜேந்திரனிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் வீடியோ கால் மூலம் ஒருவரிடம் பேசி மனைவிக்கு பிரவசம் பார்த்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Wife gives birth at home Health department shocked