புலி தப்பியது யார் தவறு...? -வனத்துறை அதிகாரிகளை கூண்டில் பூட்டி வைத்த கிராம மக்கள்...!
Whose fault it that tiger escaped villagers locked forest officials cage
கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு அருகே அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.அங்கு புலி தாக்குதலால் தங்கள் கால்நடைகளை இழந்து வந்த விவசாயிகள், புலியைப் பிடிக்கத் தவறிய வனத்துறை அதிகாரிகளையே கூண்டில் அடைத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

கடந்த சில வாரங்களாக, குண்டல்பேட்டை அருகே உள்ள பொம்மலப்புரா கிராமத்தில் புலி அடிக்கடி தோன்றி, மாடுகளை கொன்று சாப்பிட்டு வந்தது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், வனத்துறை அதிகாரிகள் புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்காமல் வெறும் பெயருக்கு மட்டும் ஒரு கூண்டு அமைத்திருந்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
இதில் நேற்று மீண்டும் புலி விவசாய நிலத்தில் தோன்றியபோது, கிராம மக்கள் வனத்துறைக்கு தகவலளித்தனர். ஆனால் அதிகாரிகள் தாமதமாக வந்ததால் புலி தப்பி ஓடியது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், புலியைப் பிடிக்க வந்த 10 அதிகாரிகளையே அதே கூண்டுக்குள் அடைத்து பூட்டினர்.இந்த சம்பவம் குறித்து அறிந்த வனத்துறை ஏசிஎப் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து, கிராம மக்களை சமாதானப்படுத்தி அதிகாரிகளை மீட்டனர்.
மேலும், புலியைப் பிடிக்கும் வரை தலைமையகத்திற்குத் திரும்பக் கூடாது என அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவையும் பிறப்பித்தனர்.
English Summary
Whose fault it that tiger escaped villagers locked forest officials cage