சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் என்னென்ன தெரியுமா...?
which places Chennai experience power outages tomorrow
நாளை மின் தடை,சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் செய்யப்படுகிறது.
இந்த மின்தடை, காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை செய்யப்படும். விரைவில் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"சென்னையில் நாளை (20.05.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அவ்வகையில் , திருமுல்லைவாயல் பகுதியில் ஆர்ச் ஆண்டனி நகர், பொதூர் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை.
அதேபோல ஆவடி பகுதியில் சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், டிஆர்ஆர் நகர், தனலட்சுமி நகர், நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
which places Chennai experience power outages tomorrow