இனி வாரம் ஒரு முறை மட்டுமே.. சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிகரித்த வந்த கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில், அதனை மேலும் கட்டுக்குள் வைக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் மெகா தடுப்பூசி முகாம்கள் வாயிலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

முன்னதாக, அசைவ பிரியர்கள் மற்றும் குடிகாரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவிக்கவில்லை என்பதால், அவர்களும் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு சனிக்கிழமையில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதையடுத்து, இனி வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கடும் மழைப் பொழிவு இருந்தபோதிலும், 12 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுவரை 77.2 சதவீதம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 41.60 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளனர். 

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே அவர்கள் தாமதிக்காமல் உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 12-வது தடுப்பூசி  முகாமுக்கு பிறகு தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடைபெறும். மேலும், இனி வாரத்திற்கு ஒரு முறை தடுப்பூசி முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weekly one day vaccination camp


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->