பெரியார் மீது காவி சாயம்! சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் பெரியார்! அனல்பறக்க பேசிய கனிமொழி! - Seithipunal
Seithipunal


பாஜக எங்களை எதிர்க்க எதிர்க்க நாங்கள் வளர்ந்து கொண்டு இருப்போம் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை பேப்பரில் உள்ள பெரிய திடலில் திராவிட கழகம் சார்பில் பெரியார் விஷன் என்ற ஓடிடி தளத்தை திராவிட கழக தலைவர் வீரமணி திமுக துணை பொது செயலாளர் கனிமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பெரியார் விஷன் என்ற ஓடிடி தளத்தை வெளியிட்டு நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டார். பின்னர் பெரியார் குறித்த கருத்துக்களையும் பெரியரின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி பேசியதாவது, அனைத்து மக்களின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர் பெரியார். நூறு ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரியாரின் சிலை மீது காவி சாயத்தை ஊற்றுகிறார்கள்.

பெரியாரைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் போது தான் பெரியார் யார் என்பதை இந்த தலைமுறை பேச ஆரம்பித்துள்ளது. பாரதிய ஜனதா எங்களை எதிர்க்க எதிர்க்கத்தான் நாங்கள் வளர்ந்து கொண்டே இருப்போம்.  ஒவ்வொரு நாட்டிலும் பிரிவு அரசியல் விதித்து கொண்டே இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We will continue to grow if BJP opposes us Kanimozhi MP


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->