நாங்க ஒன்னும் பேரம் பேசல...திமுக - விசிக பந்தம் என்றுமே உடையாது...! - கூட்டணி குழப்பங்களுக்கு எண்ட் கார்டு போட்ட திருமாவளவன்...! - Seithipunal
Seithipunal


வேளச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். அப்போது அவர் பேசியதாவது,“தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்-அமைச்சர் பதவியை அடைவது எளிதான அரசியல் பயணம் அல்ல என்பதை நான் நன்கு அறிவேன். தவெகவை பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படும் கட்சி என விமர்சித்துள்ளேன்; அந்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும், தவெக அமைச்சரவையில் விசிக ஒருபோதும் இடம்பெறாது என்பதையும் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளேன்.குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் சூழ்நிலையை தவிர்க்கவே தவெகவுக்கு வெளிப்புற ஆதரவு வழங்கினோம். மீண்டும் தேர்தல் சூழல் உருவாகக் கூடாது; அதற்கான காரணமாக விசிக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த அரசியல் நிலைப்பாடு எடுக்கப்பட்டது. இதில் மறைமுக அரசியல் எதுவும் இல்லை. அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருகிறது.

அரசியலில் வதந்திகளும் ஊகங்களும் இயல்பானவை. இருப்பினும், நாங்கள் தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் உள்ளோம்.என்னை முதலமைச்சர் பதவிக்காக திமுக அல்லது அதிமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை. ஊக அடிப்படையில் எழுப்பப்பட்ட கேள்விக்கே நான் பதிலளித்தேன்.

சில நலன் விரும்பிகள் மட்டுமே அதுகுறித்து கருத்து பகிர்ந்தனர். கிசுகிசுக்கள் மற்றும் அரசியல் முணுமுணுப்புகளின் பின்னணியில்தான் அந்த பதில் கூறப்பட்டது. என்னை முதல்-அமைச்சராக கூறிய விவகாரத்தை நான் ஒரு அரசியல் நகைச்சுவை போல் தான் எடுத்துக்கொண்டேன்.

நாங்கள் தனித்த அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறோம். கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு எடுக்கும் நேரத்திலேயே நாங்களும் அதே முடிவை எடுக்க வேண்டும் என யாரும் கருதக்கூடாது.

எங்கள் கட்சி தோழர்களுடன் ஆலோசித்து தான் எந்த அரசியல் முடிவும் எடுக்கப்படும். உடனடியாக பேரம் பேசுகிறார்கள் என்று குற்றம்சாட்டுவது பொருத்தமற்றது.

எங்களுக்கு சிந்திக்க தேவையான கால அவகாசம் தேவைப்பட்டது. இரண்டு தொகுதிகளை வைத்துக்கொண்டு யாரிடமும் அரசியல் பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மிகக் குறைந்த இடங்களுடன் கூட நாங்கள் கொள்கை அடிப்படையில்தான் செயல்படுகிறோம்” என அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We not negotiate anything DMK VSK bond never be broken Thirumavalavan puts end alliance chaos


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->