ஒகேனக்கலில் நீர்வரத்து தொடர்ந்து 4-வது நாளாக நீடித்துவரும் 18000 கன அடி...!
Water inflow Okenakkal continues for 4th consecutive day reaching 18000 cubic feet
கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி அதிகளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18000 கனஅடியாக தொடர்ந்து 4 நாட்களாக இன்றும் அதே அளவு நீடித்து வந்தது.
இதனால் சினிபால்ஸ்,மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.இதில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பிறகு அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Water inflow Okenakkal continues for 4th consecutive day reaching 18000 cubic feet