ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 43000 கனியடியாக இன்றும் நீடித்து வருகிறது...!
water flow to Okenakkal is still continuing at 43000 feet today
கர்நாடகா மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.மேலும் அங்கு பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.இந்நிலையில் கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகமாவதும் குறைவதுமாக இருந்து வருகிறது.இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43000 கனஅடி தண்ணீர் வந்தைத் தொடர்ந்து இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லிலுள்ள சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.மேலும், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை காவலர்கள் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 16-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
English Summary
water flow to Okenakkal is still continuing at 43000 feet today