பிறந்தநாள் கொண்டாடியது தப்பா...? பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு எடுத்த பிளஸ்-2 மாணவி...! - நெஞ்சை உலுக்கும் சோகம்...!
Was it wrong celebrate her birthday Plus 2 student made bizarre decision after being reprimanded by her parents Heartbreaking tragedy
வேலூர் பள்ளிகொண்டா அருகேயுள்ள இறைவன்காடு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசின் மூத்த மகளான காவியா, பொய்கை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். தனது பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் நண்பர்களை சந்தித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பல்வேறு இடங்களுக்குச் சென்று பிறந்தநாளை கொண்டாடியதற்காக பெற்றோர் அவரை கண்டித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த காவியா, மறுநாள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே தனியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த நேரத்தில், திருநாவுக்கரசு, அவரது மனைவி ஜோதிலட்சுமி மற்றும் மற்ற இரு மகள்கள் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த காவியா, மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், காவியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்க முயன்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.இந்தத் தகவலறிந்த பள்ளிகொண்டா காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், திருநாவுக்கரசு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, மாணவி உயிரிழப்புக்கான காரணம் குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் இறைவன்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Was it wrong celebrate her birthday Plus 2 student made bizarre decision after being reprimanded by her parents Heartbreaking tragedy