உஷார்! ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 17,000 கன அடியாக அதிகரிப்பு... நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை! - Seithipunal
Seithipunal


தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6,500 கனஅடியாக வந்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 10,000  கன அடியாக அதிகரித்து வந்தது.

அதன் பிறகு,9 மணிநிலவரப்படி நீர்வரத்து 15,000 கனஅடியாக அதிகரித்தது.மேலும்,  சினிபால்ஸ்,மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து விநாடிக்கு 17,000 கனஅடியாக அதிகரித்ததால் ஆற்றில், நீர் வீழ்ச்சியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனால், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பால் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Warning Water inflow to Hogenakkal has increased to 17000 cubic feet Bathing waterfall prohibited


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->