வாக்காளர் உரிமை யாத்திரை.. ராகுல்காந்தி பேரணியில் மு.க.ஸ்டாலின்!
Voter rights march M K Stalin at Rahul Gandhis rally
பீகாரில், ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்க உள்ளார். இதற்காக அவர், சென்னையில் இருந்து இன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் பீகார் புறப்பட்டு செல்கிறார்.
சமீப காலமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார். ஆளும் கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார், இதற்காக தேர்தல் ஆணையமும் ராகுல் காந்திக்கு தக்க பதிலடி கொடுத்தது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கண்டனத்தை தெரிவித்தது .இந்த நிலையில் மேலும் தேர்தல் ஆணையம் மீது
பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் ஓட்டுக்கள் திருடப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் மீது ராகுல்காந்தி எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உள்ளார்.
இந்தநிலையில் அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குகள் திருட்டு குற்றச்சாட்டை முன் வைத்தும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ‘வாக்காளர் உரிமை யாத்திரை' என்ற பெயரில் பீகாரில் கடந்த 17-ந்தேதி பேரணியை தொடங்கினார். 1,300 கிலோ மீட்டருக்கு இந்த யாத்திரையை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
பீகாரில், ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்க உள்ளார். இதற்காக அவர், சென்னையில் இருந்து இன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் பீகார் புறப்பட்டு சென்று ராகுல்காந்தி பேரணியில் கலந்துகொள்கிறார்.
இந்த பேரணி நிறைவடையும் இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின்னர் அவர், அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் தர்பங்கா விமான நிலையம் வருகிறார். பின்னர் சிறப்பு விமானம் மூலம் மாலை 4.30 மணியளவில் சென்னை திரும்புகிறார்.
English Summary
Voter rights march M K Stalin at Rahul Gandhis rally