தவெக மாநாட்டில் பவுன்சரால் தூக்கி வீசப்பட்ட தொண்டர்கள்! உயிரோட அருமை தெரியுமா விஜய்..? காயப்பட்ட இளைஞரின் தாய் விட்ட சாபம்..!
Volunteers thrown out by bouncer at Thaweka conference Does Vijay know the value of life The curse left by the mother of the injured youth
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 2500 ஆண் பவுன்சர்களும், 500 பெண் பவுன்சர்களும் மாநாட்டு வளாகத்தில் பணியமர்த்தப்பட்டனர்.
“உங்கள் விஜய்… நான் வரேன்…” என்ற பாடலுடன் ரேம்ப் வாக் மேற்கொண்ட விஜயை நெருங்கி ரசிகர்கள் செல்ல முயன்றபோது, பவுன்சர்கள் கடுமையாக தடுத்து நிறுத்தினர். மேடையில் யாரும் ஏறக்கூடாது என இரும்புக் கம்பிகளில் கிரீஸ் தடவப்பட்டிருந்தாலும், உற்சாகத்தில் சில ரசிகர்கள் மேடையை ஏறினர்.
அப்போது பவுன்சர்கள் அவர்களை குட்டுக் கட்டாக தூக்கி தரையில் எறிந்தனர்.
இதனால் காயமடைந்த பலரும் வலியால் தவித்தனர்.
ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.மற்றொருவர் ரேம்ப் மேடையிலிருந்து கீழே விழாமல் கம்பியைப் பிடித்து தொங்கினார்.கம்பியை விடியிருந்தால் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கும் அபாயம் நிலவியது.இதனை வீடியோவில் பார்த்த இளைஞர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காயமடைந்த சரத் குமாரின் தாய் சந்தோஷத்தின் உருக்கமான பேச்சு
காயமடைந்த ரசிகர் சரத் குமார் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர். அவரது தாய் சந்தோஷம், கண்கலங்கியபடி கூறியதாவது:
“என் பையன் விஜய் மாநாடு போகிறேன்னு சொல்லவில்லை. திருச்சிக்கு இண்டர்வியூக்குப் போறேன்னு சொல்லிட்டு போயிருந்தான். பிறகு தான் மாநாட்டில் இருக்கிறான் என்று தெரிந்தது.”
“விஜயை பார்க்கும் ஆர்வத்தால மேடையில் ஏறினான். பொறுமையா நகர்த்தியிருக்கலாம். ஆனால் பவுன்சர்கள் குப்பை போல தூக்கி எறிந்தனர்.”
“அவன் கை கால் உடைந்து இருந்தா என்ன ஆகும்? உயிரே போயிருந்தா என் குடும்பம் என்ன செய்வது?”“உயிரின் மதிப்பு விஜய்க்கு தெரியுமா? அவன் கம்பியைப் பிடிக்காம விழுந்திருந்தா, நாங்க இப்ப பிள்ளையையே இழந்திருக்கணும்.”
“இப்பவே உன் ரசிகர்களுக்கு பாதுகாப்பு தர முடியலேன்னா, மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தரப் போற? சொல்லுற மாதிரி செய்றதில்ல. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மனிதத்தன்மை காட்டணும்.”
அவர் உருக்கமாக,“என் பிள்ளை மேலயும் தப்பு இருக்கு. எதுக்கு அந்த மாநாட்டுக்கு போகணும்? எவனா இருந்தாலும் வீடு தேடி வரட்டும். நமக்கு புடிச்சவனுக்கு ஓட்டு போடுவோம். அவனவன் எதை எதையோ செய்றான், அது நமக்கு தேவையில்லாத விஷயம்” என வேதனையுடன் கூறினார்.இந்தச் சம்பவம், அரசியல் கூட்டங்களில் ரசிகர்கள்/தொண்டர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது.
English Summary
Volunteers thrown out by bouncer at Thaweka conference Does Vijay know the value of life The curse left by the mother of the injured youth