வக்ஃபு வாரிய சட்டத்தை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும்..தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி போராட்டம்!
The Tamil Nadu Muslim League party demands the immediate implementation of the Wakf Board Act in Tamil Nadu
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய சட்டத்தை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த கோரி தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போராட்டமானது நடைபெற்றது.
வக்ஃபு வாரிய சொத்துக்கள் என்பது இஸ்லாமியப் பெரியவர்கள் அந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், இறை இல்லங்களை எழுப்பி வழிபாடு செய்வதற்காகவும், சமூக நலத் தொண்டுகளுக்காகவும் இறைவனுக்காக கொடுக்கப்பட்ட அர்ப்பணிப்பு சொத்துக்களாகும்.
இந்த சொத்துக்களை பயன்படுத்தும் முழு உரிமையும் இஸ்லாமிய சமூகத்தவர்களுக்கு மட்டுமே உண்டு என்றாலும், அதனை தனிப்பட்டவர்கள் உரிமை கூட கொண்டாட எவ்வித அனுமதியும் இல்லை. அதனால், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள வக்ஃபு சொத்துக்கள், வக்ஃபு சட்டம் 1995-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மத்திய அரசு வக்ஃபு சட்டத் திருத்த மசோதா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது.இந்தநிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரி தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போராட்டமானது நடைபெற்றது.

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தென் சென்னை மாவட்ட சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. வக்ஃபு மசோதாவை உடனடியாக மாநில அரசுகள் மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றக் கோரி போராட்டம் நடைபெற்றது. தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த போராட்டமானது நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இந்த தென் சென்னை மாவட்ட செயலாளர் ரகுமான் பாட்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ் மாநில முஸ்லிம் கட்சி தொண்டர்கள் உடனடியாக மத்திய மாநில அரசுகள் வக்ஃபு மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும் வக்ஃபு மசோதாவை வாரிய சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர் .இந்த போராட்டத்தில் தென் சென்னை மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர்மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
English Summary
The Tamil Nadu Muslim League party demands the immediate implementation of the Wakf Board Act in Tamil Nadu