திருட்டு திருமணத்திற்கு பக்கா பிளானுடன் கடத்தல்... உள்ளே வைத்து வெளுத்தெடுத்த காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி காலனி பகுதியை சேர்ந்தவர் யவனம். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில், அவரது உறவினர்களான கோவையை சார்ந்த பவித்ரன் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக யவனத்தை நிச்சயம் செய்துள்ளனர். 

பவித்ரனிற்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் ஆனதாக தகவல் வெளி வந்த நிலையில், மணப்பெண் யவனம் வீட்டில் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த பவித்ரன் தரப்பில், ஏற்கனவே நிச்சயம் செய்தபடி பெண்ணை கொடுக்குமாறு மிரட்டி வந்துள்ளனர். 

மேலும், யவனம் வீட்டில் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று பவித்ரன் தனது உறவினர்களுடன் மல்லி கிராமத்திற்கு சென்று, அங்கு வீட்டில் இருந்த யவனத்தின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்டோரை தாக்கிவிட்டு யவனத்தை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து கடத்திச் சென்றனர். 

பின்னர் அவர்களிடமிருந்து தப்பி செல்லும் முயற்சியில், வாகனத்திலிருந்து கீழே விழுந்து யவனத்தின் இடது கால் மணிக்கட்டு எலும்பு முறிவு ஏற்படவே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் காரில் வந்த கும்பல் இராஜபாளையத்தில் உள்ள மலையடிப்பட்டி அழைத்துச் சென்றுள்ளனர். 

இதனையடுத்து யவனத்தின் தந்தை இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினர் திருவில்லிபுத்தூர், சிவகாசி, இராசபாளையம் பகுதி காவல் நிலையங்களை உஷார்படுத்தியுள்ளனர். கடத்தலில் ஈடுபட்டு நபர்களின் அலைபேசி எண்ணை சோதனை செய்ததில், இராசபாளையம் பகுதியில் உள்ள மலையடிப்பட்டி பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இராசபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினரால் மீட்கப்பட்ட யவனம்  ரத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், பவித்ரன் மற்றும் வெங்கடேசன் உட்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruthunagar girl kidnapped police investigation


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal