விருதுநகர் காங்கிரஸ் எம்பி பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கு! - Seithipunal
Seithipunal


விருதுநகரில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பி மாணிக்க தாகூரின் வெற்றிக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இது குறித்த அவர் மனுவில், தேர்தலில் முறைகேடு நடந்த உள்ளதாகவும் (4379 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தகவல் வெற்றி பெற்றிருந்தார்), எனவே இந்த தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். 

மேலும் மாணிக்கம் தாகூர் தாக்கல் தனது வேட்பு மனுவில் உண்மை தகவல்களை மறைத்துள்ளதாகவும், அவர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் விஜயபிரபாகரன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, வழக்கு குறித்து தேர்தல் ஆணையமும், மாணிக்கம் தாகூர் பதிலளிக்க கோரி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகின்ற அக்டோபர் மாதம் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruthunagar Congress DMDK


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->