வத்திராயிருப்பு: 21 முதல் 24 ஆம் தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு அருகேயிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில். இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். 

இந்த கோவில் மலைமேல் அமைந்துள்ள நிலையில், இக்கோவிலுக்கு செல்ல பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் போன்ற நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். கோவில் அமைந்துள்ள பகுதி வனத்துறை சரகத்திற்கு உட்பட்டது எனபதால் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. 

இந்த மாதத்தில் 21 ஜூலை 2021 அன்று ஆடி பிரதோஷம் மற்றும் 23 ஜூலை 2021 அன்று பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல நாளைய தினம் (21/07/2021) முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 24 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 

மலையேற வரும் பக்தர்கள் மலையடிவாரத்தில் கிருமி நாசினி மூலமாக கைகளை சுத்தப்படுத்த வேண்டும். பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. 

சிகிரெட், பீடி போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மலைப்பகுதியில் திடீரென மழை பெய்ய தொடங்கினால், அல்லது அதற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பக்தர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Watrap Sathuragiri Hills Temple Visit Forest Dept Permit 21 July 2021 to 24 July 2021


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal