வாகன விபத்தில் அரசுப்பள்ளி ஆசிரியை மரணம்.. விருதுநகரில் பெரும் சோகம்.! - Seithipunal
Seithipunal


மதுரை - தூத்துக்குடி சாலையில் குண்டாறு பாலத்தில் அரசுப்பள்ளி ஆசிரியை விபத்தில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகர் பகுதியை சார்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி விஜயமாலினி (வயது 48). இவர் அருப்புக்கோட்டை அருகேயுள்ள சொக்கம்பட்டி அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

இன்று, விஜயமாலினி தனது இருசக்கர வாகனத்தில், விருதுநகரில் இருந்து சொக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளார். இதன்போது, மதுரை - தூத்துக்குடி வழியில் உள்ள குண்டாறு பாலத்தின் மீது செல்கையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 

வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆசிரியை விஜயமாலினி, கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு காவல் துறையினர், ஆசிரியையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆசிரியை விஜயமாலினி விபத்து ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டதா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Govt School Teacher Vijaya Malini Died Accident at Madurai Thoothukudi Gundar NH Bridge


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal