#விருதுநகர் | சாத்தூர் அருகே பட்டாசு கடை வெடி விபத்தில் ஒருவர் பலி!
Virudhunagar Achankulam Fire accident
விருதுநகர், சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு கடையில் வெடி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த அச்சங்குளம் கிராமத்தில் தனியார் சொந்தமான பட்டாசு கடை ஒன்று இயங்கி வந்தது.
இந்த பட்டாசு கடையில், பட்டாசுகள் மட்டுமல்லாமல், அனுமதியில்லாமல் பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில், இன்று பகல் சுமார் ஒரு மணி அளவில் திடீரென இந்த பட்டாசு கடைகள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கடையில் இருவர் பணியில் இருந்ததாகவும், அதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தீயணைப்பு துறையினர், போலீசார் பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இந்த பட்டாசு கடையின் உரிமையாளர் தற்போது தலைமுறை வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. பட்டாசு கடைக்கு மட்டுமே உரிமையை வைத்துக்கொண்டு, பட்டாசு தயாரித்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும், மேலும் எத்தனை பேர் சிக்கி உள்ளார்கள் என்பது மீட்பு பணிகள் முடிந்த பிறகு தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
English Summary
Virudhunagar Achankulam Fire accident