பிள்ளையாரை கரைப்பதற்கு கட்டணம்! தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு!
Vinayagar Chathurthi Statue TNGovt Poovulagin Nanbargal
விநாயகர் சதுர்த்தியன்று சிலைகளை கரைப்பதற்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இன்று, விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு கட்டாயம் கட்டணம் நிர்ணயிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் சிலை கரைப்பது என்பது வழிபாட்டு உரிமை மக்களின் உணர்வு சம்பந்தப்பட்டது என்றும் பதிலளித்துள்ளது.
இந்நிலையில், விநாயகர் சிலைகள் கரைப்பு தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு மறுப்பு - பூவுலகின் நண்பர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செய்திக்குறிப்பில், "பிள்ளையாரை கும்பிடக் கூடாது என்று சொன்னால்தான் அது வழிபாட்டு உரிமை சம்பந்தப்பட்டது.
ஆனால் சூழலை மாசுபடுத்தும் வகையில் பிள்ளையார் மட்டுமல்ல எந்த கடவுளை கரைப்பதும் அது மாசு சம்மந்தப்பட்டது ஆகும்.
எனவே தமிழக அரசு பிள்ளையாரை கரைப்பதற்கான தொகையை நிர்ணயம் செய்யவேண்டும்" என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
English Summary
Vinayagar Chathurthi Statue TNGovt Poovulagin Nanbargal