கிறிஸ்துமஸ் பண்டிகைகாக நாசா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்..!
A photo released by NASA for the Christmas festival has gone viral on the internet
நாசா ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் விண்வெளியில் நடக்கும் கொண்டாட்டங்கள், விண்வெளி வீரர்கள் அனுப்பும் வாழ்த்துச் செய்திகள், மற்றும் 'கிறிஸ்துமஸ் மரம்' போன்ற வடிவங்களில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களின் படங்களைப் பகிர்ந்து வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டு ஹபிள் வான் தொலைநோக்கி மூலமாக எடுக்கப்பட்ட ஸ்வன் நெபுலா புகைப்படத்தை பகிர்ந்துள்ள அமெரிக்காவின் 'நாசா' அமைப்பு, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
இது விண்வெளிப் பயணத்தின் பாரம்பரியத்தையும், பிரபஞ்சத்தின் அழகையும் காட்டுகிறது. இந்த ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் பூமியில் உள்ள மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அத்துடன், அந்த புகைப்படத்தில், 'கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இந்த வருடம், நாங்கள் உங்களுக்கு பரிசாக இந்தப் படத்தை வழங்குகிறோம்' என அந்த பதிவில் நாசா குறிப்பிட்டுள்ளது.
English Summary
A photo released by NASA for the Christmas festival has gone viral on the internet