விந்தணு தானம் மூலம் 100 குழந்தைகள் உள்ள 'டெலிகிராம்' நிறுவனர்; மீண்டும் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பெண்களுக்கு அழைப்பு..! - Seithipunal
Seithipunal


'டெலிகிராம்' சமூக வலைதள நிறுவனரான பாவெல் துரோவ். ரஷ்யாவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர், டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்,(41). இவரது சொத்து மதிப்பு, 1.52 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

துரோவுக்கு மூன்று மனைவியர் மூலம் ஆறு குழந்தைகள் உள்ளன. இது தவிர, விந்தணு தானம் செய்ததன் மூலம், அவருக்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இளம் பெண்கள் தன் விந்தணுவைப் பயன்படுத்தி செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றால், முழு மருத்துவ செலவை ஏற்பதுடன், அனைத்து குழந்தைகளுக்கும் தன் சொத்தில் சம பங்கு கிடைக்கும் என்றும் பாவெல் துரோவ் அறிவித்துள்ளார்.

துரோவின் புதிய அறிவிப்பின் படி, தன் விந்தணுவை பயன்படுத்தி, குழந்தை பெறும், 37 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான, முழு மருத்துவ செலவையும் தானே ஏற்பதாக அவர் அறிவித்துள்ளார். உலக அளவில் ஆண்களின் விந்தணு தரம் குறைந்து வருவதால், சமூகப் பொறுப்பாக எடுத்துக்கொண்டு இத்தானத்தை தொடங்கியுள்ளதாக துரோவ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Telegram founder again calls on women to have children through artificial insemination


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->