இடைக்கால அரசு மத சுதந்திரத்தில் தலையிடுவதால் சிறுபான்மையினர் உயிருடன் எரிப்பது போன்ற அட்டூழியங்களுக்கு வழிவகுக்கிறது; ஹசீனா குற்றசாட்டு..! - Seithipunal
Seithipunal


நமது அண்டைய நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அண்மையில் திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞரை  இஸ்லாமிய மத கும்பல் ஒன்று, நபி அவர்களை அவதூறாக பேசியதாகவும், வாந்திகளை நம்பி அவரை, அடித்தே கொன்றதுடன், அவரது உடலை மரத்தில் கட்டிவைத்தும், நடுரோட்டில் போட்டு எரித்தும் மிக கொடூர செயலில் ஈடுப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு வசிக்கும் ஹிந்து மக்கள் மீள்வதற்குள், அவர்களின் வீடுகளுக்கு தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த அசாதாரான சூழலில் நேற்று நள்ளிரவு மற்றொரு ஹிந்து மத இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்தாண்டு மாணவர் போராட்டத்தில் அந்நாட்டின் பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.  இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: 

வங்கதேச நிறுவனர் நாட்டை, மதசார்பற்ற நாடாக இருக்க கனவு கண்டார். இந்த கனவு நிறைவேற, அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ்வதை அவாமி லீக் கட்சி உறுதி செய்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சட்டவிரோதமாக அதிகாரத்தை கைப்பற்றிய தற்போதைய அரசு, அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்களின் மத சுதந்திரத்தில் தலையிடுகிறது என்பது வருத்தமளிக்கிறதாக பேசியுள்ளார்.

மேலும், இதனால் மதச் சிறுபான்மையினர் உயிருடன் எரிப்பது போன்ற அட்டூழியங்களுக்கும் இது வழிவகுக்கிறதாகவும், வங்கதேச மக்கள் இந்த இக்கட்டான நிலை தொடர அனுமதிக்க மாட்டார்கள் என்றும், சிறுபான்மையின மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர் என்று ஹசீனா கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hasina said that atrocities such as burning minorities alive in Bangladesh are worrying


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->