துாய சக்தி என்று கூறுபவர்,'ஜனநாயகன்' படத்திற்கு பிளாக் டிக்கெட் கிடையாது என கூறுவாரா..? சீமான் கேள்வி..!
Seeman questioned whether those who claim to be proponents of clean politics would say that there will be no black market tickets for the film Jananaayagan
துாத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லுாரில் நேற்று இரவு நடந்த வேலு நாச்சியார் நினைவு பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், வேலு நாச்சியார் வழியில் வந்த நம் தமிழ் பெண்கள், 1,000 ரூபாய்க்கு அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஈ.வெ.ராமசாமி வந்த பின்தான் பெண்களுக்கு உரிமையை பெற்று தந்தாரா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நம் தமிழ் பேரரசி வேலு நாச்சியார், ஏழு மொழி கற்று, வாள் வீச்சு, வில்லம்பு, சிலம்பம், குதிரை ஏற்றம், போர் பயிற்சி பெற்றவர் என்று பெருமிதமாக பேசியுள்ளார்.

ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள், திராவிட அடையாளங்களை நிறுவிக்கொண்டே வருகின்றனர். மானங்கெட்ட மனிதர், 1,000 ரூபாய்க்கு அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், திராவிடன் என்பதே தமிழன் அல்லாதவன் வாழ்வதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்று என்றும், டாஸ்மாக் கட்டடம் இடிந்து யாரேனும் உயிரிழந்திருக்கின்றனரா..? ஆனால், திராவிட மாடல் ஆட்சியில், அரசு பள்ளி கட்டடம் இடிந்து மாணவ - மாணவியர் இறக்கின்றனர் என்று திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதுத, பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் ஜல்லிக்கட்டு வளாகம் நாங்கள் கேட்கவில்லை என்றும், கம்பு கட்டி கூட நடத்திக் கொள்வோம். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மட்டும் தான் கேட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டு வளாகத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தீர்கள். அவர் என்ன ஜல்லிக்கட்டு விளையாடினாரா..? மாட்டை அடக்கினாரா..? அல்லது மாடுபிடி வீரரா.? என்று கேள்வி எழுப்பியதோடு, எதைப் போற்றுவது, எதை துாற்றுவது என தெரியாமல் தற்குறி கூட்டம் உலாவி வருகிறது என்று சாடியுள்ளார்.
தொடர்ந்து சீமான் பேசுகையில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சொல்லுக்கு அடித்தளம் இட்டதே நான் தான் என்றும், நம் கட்சியின் வண்ணக்கொடி தான், த.வெ.க.,வுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
துாய சக்தி என கூறுபவர், (விஜய்) 'ஜனநாயகன்' படத்திற்கு பிளாக் டிக்கெட் கிடையாது என கூறுவாரா?. எத்தனை பேர் பேரம் பேசியும் விலை போகாதவன் நான் என்றும், திருச்சியில், வரும் பிப்ரவரி 21-இல் நடக்கும் மாநாட்டில், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Seeman questioned whether those who claim to be proponents of clean politics would say that there will be no black market tickets for the film Jananaayagan