விழுப்புரம் மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் பலி!
vilupuram fisher man dies
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே உள்ளே கோமுட்டி சாவடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவருக்கு குமரேசன் (வயது 23), சுமன் ராஜ் (வயது20) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இன்று அதிகாலை மூர்த்தி இவரது மகன்கள் இருவரையும் அழைத்து அவர்களுக்கு சொந்தமான பைபர் படிகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மூவரும் படகை விரைந்து செலுத்தி ஆழ்கடல் வரை சென்று மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களது படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்ததில் 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அதில் மூர்த்தி மட்டும் உயிரிழந்து விட்டார். அவரது 2 மகன்களும் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து வந்த மரக்காணம் போலீசார் மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
vilupuram fisher man dies