விக்கிரவாண்டி - உளுந்தூர்பேட்டை சாலையில் வழிப்பறி கொள்ளையர்கள்?.. வெளியான பரபரப்பு வீடியோ.! - Seithipunal
Seithipunal


சாலைவழி பயணங்களில் ஒருபுறம் விபத்து தொடர்பான பயம் இருந்தாலும், மற்றொருபுறம் வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கார்கள், லாரிகள், பேருந்துகள் என தங்களின் நிலைமைக்கு ஏற்றார்போல குறிவைத்து, அந்த சூழ்நிலைக்கு தகுந்தார் போல திருடர்கள் மக்கள் போல உலாவி உதவி கேட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து செல்வதும், தர மறுக்கும் நபர்களை கொலை செய்து செல்வதும் தொடர்கதையாகியுள்ளது. 

அந்த வகையில், விழுப்புரம் விக்கிரவாண்டி முதல் உழுதூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக சென்ற நபரை நோட்டமிட்டு, இருசக்கர வாகனத்தில் வந்து மிரட்டியது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்தவர், தனது புதிய கார் ஒன்றில் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றுள்ளார். 

இதன் போது இவர் தனியாக காரில் இருப்பதை அறிந்த மர்ம நபர்கள், தயாராக இருக்கும் திருட்டுக் கும்பலிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உளுந்தூர்பேட்டை நோக்கி செல்லும் போது, தேசிய நெடுஞ்சாலை வழியிலேயே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், காரை நிறுத்தச் சொல்லி ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும், வாகனத்தை தாக்கியும், சேதப்படுத்தியும், விபத்து ஏற்படுவது போல வாகனத்தை இடையே நிறுத்தியும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். 

சுதாரித்த கார் ஓட்டுனர் காரை நிறுத்தினால் நமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால், வாகனத்தை தொடர்ந்து இயக்கியபடி சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சியில் 2 வாலிபர்கள் ஹெல்மெட் அணிந்து, அவர்களின் வண்டி என்னும் பதிவு செய்ய முடியாத அளவிற்கு மறைத்து வைத்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த வாகனத்தை இயக்கியவர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி சென்றதும், அங்குள்ள தேநீர் கடையில் நிறுத்தி விசாரித்தபோது இது போன்ற தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி கொள்ளை அடிக்கிறார்கள்? என்பது இன்றுவரை புரியாத புதிராக இருப்பதாகவும், தனியாக வாகனத்தை இயக்கி வரும் நபர்கள் மற்றும் காரில் காரில் தம்பதிகளாக வரும் நபர்களை குறிவைத்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றுவதாகவும் தேநீர் கடை நடத்துபவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Viluppuram Vikravandi to Ulunthurpet Toll Plaza Highway Night Time Robbery


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->