ஐ.டி கையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்!! மார்பில் கடை அதிபரிடம் தீவிர விசாரணை!!.!!
Villupuram Marble Shop IT raid Completed
தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய வருமானவரித்துறையினரின் சோதனையானது இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் அதிபர் பிரேம்நாத்தின் மார்பல் கடை மற்றும் தங்கும் விடுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சோதனை நிறைவு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது பிரேம்நாத் வீட்டில் மட்டும் வருமானவரித் துறை அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரேம்நாதிற்கு சொந்தமான மார்பில் கடை மற்றும் விடுதிகளில் கடந்த 52 மணி நேரமாக நடைபெற்ற வந்த சோதனையானது தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் பிரேம்நாத் மற்றும் அவருடைய உறவினர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Villupuram Marble Shop IT raid Completed