கோவை : வழி தெரியாமல் திண்டாடிய மூதாட்டி.! மனிதாபிமானத்துடன் நடந்த பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அருகே வடசித்துர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி பொன்னம்மாள் தம்பதியினர். இதில், பழனிச்சாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், பொன்னாம்மாள் அந்த பகுதியில் உள்ள கோவிலில் தங்கி தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், பொன்னம்மாளிடம் அவரது சகோதரி ரூபாய் 25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். தற்போது பொன்னம்மாளுக்கு பணம் தேவைப்படுவதால், அந்த பணத்தை வாங்குவதற்காக பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் வசிக்கும் அவரது சகோதரியை தேடி வந்துள்ளார். 

ஆனால், சரியான முகவரி தெரியாததால் பொன்னம்மாள் ஆறுமுத்தாம்பாளையம் பள்ளி முன்பு அமர்ந்துள்ளார். நீண்ட நேரமாக ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதை பார்த்த பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்களிடம் தனது சகோதரியை தேடி வந்தது குறித்து பொன்னம்மாள் தெரிவித்துள்ளார். அதன் படி, மூதாட்டி பொன்னம்மாளை அவரது சகோதரி வீட்டிற்கு அழைத்து சென்றனர். 

அங்கு, அவருக்கு உணவு மற்றும் ரூ.2 ஆயிரம் பணத்தை அவரது சகோதரி வழங்கியுள்ளார். அதனை வாங்கி கொண்டு அவருக்கு உதவிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

village peoples help to old lady for without address


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->