'விஜய்யைப் பொறுத்தவரை இது ஒரு சரித்திரச் சாதனை'; தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி பேட்டி..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரத்தை படி, 105 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 105, அதிமுக 65, திமுக 64 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் முன்னிலை பெற்று வருகிறார். அதேபோன்று வில்லிவாக்கத்தில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் உள்ளார்.

எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் ராஜ்மோகனும், திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜும் முன்னிலையில் உள்ளனர். 

அதேப்போன்று, 30 ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக இருந்த பாளையங்கோட்டை தொகுதியில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் தவெகவின் பிரபு முதலிடத்தில் உள்ளார். அங்கு சீமான் 03-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

முதல் முதலில் தேர்தலை சந்தித்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில் ஏனைய பிரதான கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்நிலையில், விஜய்யின் இந்த வெற்றிக் குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாவது;


"ஒரு தந்தையாக, நான் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். என் மகனுக்கு என் நல்வாழ்த்துகள். கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவேன் என்ற விஜய்யின் தன்னம்பிக்கையுடன் இருந்தார். அந்த மனப்பான்மையை நான் பெரிதும் பாராட்டுகிறேன். ஒரு தலைவனாக, எந்தக் கூட்டணியும் இன்றித் தான் தனித்து நின்று சாதிப்பேன் என்ற அவரது துணிச்சல் போற்றுதலுக்குரியது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. விஜயைப் பொறுத்தவரை இது ஒரு சரித்திரச் சாதனை என்று நான் கருதுகிறேன்." என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijays father SA Chandrasekhar gives an interview regarding Vijays success


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->