#தமிழகம் || அரசு பேருந்து மோதி தூக்கிவீசப்பட்ட வீரன், தர்மன்., வெளியான சிசிடிவி காட்சிகள்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் அருகே கவனக்குறைவாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது, அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

வெம்பக்கோட்டை பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரன், தர்மன் என்ற இருவர் தங்களது இருசக்கர வாகனத்தில் வெம்பக்கோட்டை ராஜகாளியம்மன் பகுதியில் சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது, அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து இவர்களில் இரு சக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இது குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

venmpakottai accident


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->