திடீரென இடிந்து விழுந்த சுவர்! அடுத்தடுத்து பிரிந்த உயிர்கள்! வேலூரில் பெரும் சோகம்! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வேலூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் உணவகத்தின் பழைய சுவர் இடிந்து விழுந்துள்ளது.

அதனை அகற்றுவதற்காக இன்று காலை பணியில் ஈடுபட்ட மூன்று பேர் மீது பழைய சூப்பர் மீண்டும் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த வெண்ணிலா மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சலவன் பேட்டை பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. மேலும் வெண்ணிலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் குறித்து வருவாய் ஆய்வாளர் ஷர்மிளா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் உணவக உரிமையாளர் விஜயராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore wall collapse death toll rises to two


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->