இன்று முதல் சுங்கத் கட்டணம் கிடையாது - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இன்று முதல் சுங்கத் கட்டணம் கிடையாது - எங்குத் தெரியுமா?

இரண்டு நாட்களாக 'கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தின்கீழ் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறைமலை நகரில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பெருங்குடி சுங்கச்சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூலிப்பது, திமுக அரசு பதவி ஏற்றவுடன், கைவிடப்பட்டது.

இதனால், இந்த சுங்கச் சாவடி வழியாக செல்வோர், தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிவோர் என்று பல்வேறு தரப்பினர் பெரும் பயனடைந்தனர். இந்த சாலையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் விரைவாக நடந்து வருவதால், சாலையின் பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று இன்று முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும். 

இதனால் மக்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார். முதல்வரின் அறிவிப்பின் படி, "இன்று முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vechicle charges free in navalur toll plaza from today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->