ஆசிரியராக இருந்து, அத்துமீறிய விசிக நிர்வாகி! அடக்கி சிறையில் வைத்த மாணவிகள்! செங்கல்பட்டில் பரபரப்பு!
VCK union secretary arrested by Pocso act in Lathur
பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதையடுத்து, அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிபவர் மணிமாறன். லத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லத்தூர் ஒன்றிய செயலாளராகவும் செயலாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பெயரை புரட்சிமாறன் என்றும் மாற்றி வைத்துள்ளார்.

இவர் மாணவிகளிடம் வகுப்பறையில் அநாகரிமாக நடந்ததாகவும், ஆபாசமாக பேசியதுடன், தொடக்கூடாத இடங்களில் தொட்டு பேசியதாகவும் அவர் மேல் மாணவிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புதுப்பட்டினம் ஈசிஆர் சாலையில் சாலை மறியல் நடைபெற்றது. அவரை உடனடியாக போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட விசிக ஒன்றிய செயலாளர் புரட்சிமாறன் என்கின்ற மணிமாறன் போக்ஸோவில் கல்பாக்கம் காவல்நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அத்துமீறிய விசிக நிர்வாகியை அடக்கி வைத்த மாணவிகளின் துணிச்சலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
English Summary
VCK union secretary arrested by Pocso act in Lathur