எச்சை பிழைப்பு., காவல்துறை வெறி நாய்களே., துணிவு இருந்தால் வெளியே வாடா! வைரலாகும் விசிகவினர் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள அரசு நிலத்தை திலகவதி என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். ஆனால் அந்த நிலத்தை விசிகவினர் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக திலகவதி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஆரணி நகர காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர் சாதி அடிப்படையில் திட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 8ம் தேதி இரவோடு இரவாக விசிக நிர்வாகி பாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த விசிக பிரமுகர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஜனவரி 9ம் தேதி காலை ஆரணியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மணி கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினரை கைது செய்தனர். இதனால் ஆரணி பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. இந்த நிலையில் ஆரணி நகர காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை திட்டிய விசிக பிரமுகர் பாஸ்கர் நீதிமன்றம் மூலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இதனை கொண்டாடும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஸ்கரை காரில் ஊர்வலமாக ஆரணி நகர் முழுவதும் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில் காவல்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

குறிப்பாக இந்த ஊர்வலம் ஆரணி நகர காவல் நிலையம் அருகே வந்ததும் "தைரியம் இருந்தால் வெளியே வாடா... அன்றைக்கு குதித்தாயே.. இன்று எங்கே ஆளே காணோம்... வீடியோ எடுக்கிற காவல் நாய்களே... வெளியே வாடா... மாமுல் வாங்கும் காவல்துறையே... எச்சை பிழைப்பு.. மானக்கேடு...

காவல்துறை வெறி நாய்களை... விட மாட்டோம்... மாமுல் வாங்கி குடும்பம் நடத்தும் காவல்துறையே.. த்தூ த்தூ மானக்கேடு.."என கோஷமிட்டவாறு காவல் நிலையம் அருகே விசிக பிரமுகர் பாஸ்கருக்கு சந்தன மாலை அணிவித்து காவல்துறைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் ஆரணி நகர் முழுவதும் பதட்டமான சூழல் உண்டானது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK members scolding tnpolice video viral on social media


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->