5 மாநிலங்கவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிவிப்பு!
kashmir punjab 5 rajya sabha election
ஜம்மு-காஷ்மீருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 4 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள், 2021ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிந்தபின் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாததால் காலியாக இருந்தன. அப்போது அங்குள்ள சட்டப்பேரவை தேர்தல் நடைபெறாததால், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவி காலம் முடிந்த பின் அந்த இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
தற்போது ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்துள்ளதால், மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய தேவையான சட்டப்பேரவை உறுப்பினர் வாக்குகள் உள்ள நிலையில், தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் காலியாக உள்ள 4 இடங்களில் 3 இடங்களுக்கு தனித்தனி தேர்தல்கள் நடைபெறும்.
இதே நேரத்தில், பஞ்சாபில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சஞ்சீவ் அரோரா, அங்குள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த ஜூலையில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு ஒரு இடம் காலியாகியுள்ளது.
இந்த சூழலில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களவில் உள்ள மொத்தம் 5 காலியிடங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 6 முதல் தொடங்கும். போட்டி நிலவின் பட்சத்தில் அக்டோபர் 24 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். அதே நாளில் மாலை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
kashmir punjab 5 rajya sabha election