பெற்றத் தாயிடம் ஜெராக்ஸ் பத்திரம் கொடுத்து பணமோசடி செய்த மகள் - 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாவட்டம் லாஸ்பேட்டை சமுதாய நலக்கூடம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜான்-ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தங்களது கணவர்களுடன் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

இதில் மூன்றாவது மகள் அனந்தநாயகி என்பவர் தனக்கு சொந்தமான வீட்டு பத்திரத்தை கடந்த 2021-ம் ஆண்டு குடும்ப தேவைக்காக தனது தாயார் ராஜேஸ்வரியிடம் அடகு வைத்து ரூ.2லட்சம் கடன் வாங்கியுள்ளார். 

ஆனால், 4 ஆண்டுகளாகியும் அனந்தநாயகி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதற்கிடையே ராஜேஸ்வரி பத்திரத்தை சிலரிடம் காண்பித்த போது அது கலர் ஜெராக்ஸ் பத்திரம் என்பது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி தனது மகளிடம் பணம் அல்லது ஒரிஜினல் பத்திரத்தை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் இரண்டையுமே திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராஜேஸ்வரி, தனது மகள் அனந்தநாயகி மீது போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரின் படி போலீசார் அனந்த நாயகி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றத் தாயிடமே மகள் பணமோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

daughter money fraud to mother in puthuchery


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->