என்எல்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 44 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்... அக்டோபர் 3 கடைசி!
NLC job oct 2025
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) நிறுவனத்தில் அனல் மின் நிலையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்கான 44 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற நிர்வாகிகள் அக்டோபர் 3க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணிகள் மற்றும் தகுதிகள்:
• Executive (Operation) – 17 இடங்கள். எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். BTG, SHS துறைகளில் அனுபவம் அவசியம்.
• Executive (Maintenance) – 17 இடங்கள். சிவில் அல்லது மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிவில், பாய்லர், டர்பைன், AHS, LHS பராமரிப்பு அனுபவம் வேண்டும். சம்பளம் மாதம் ரூ.71,000. வயது வரம்பு: 6.10.2025 அடிப்படையில் 63க்குள் இருக்க வேண்டும்.
• Health Inspector – 16 இடங்கள். பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹெல்த் சானிடேஷன் டிப்ளமோ மற்றும் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் அவசியம். சம்பளம் மாதம் ரூ.38,000. வயது 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு, ஓபிசி – ரூ.854; எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் – ரூ.354. கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க: [www.nlcindia.in](http://www.nlcindia.in) இணையதளம் மூலம் அக்டோபர் 3க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.