பிக் பாஸ் வீட்டிற்கு வந்த விஜய்சேதுபதி மகன்!அப்பாவிற்கு பதில் மகனா? வெளியான தகவல்!
Vijay Sethupathi son arrives at Bigg Boss house Is he a replacement for his father Information revealed
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசன், ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும் தற்போது போட்டியாளர்களின் உண்மையான ஆட்டம் வெளிப்பட தொடங்கியுள்ளதால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. நேற்றைய எபிசோடில் விஜய் சேதுபதி பல போட்டியாளர்களை நேரடியாகக் கடிந்து விழித்தெழச் செய்ததும், வீட்டுக்குள் உள்ள சூழலை சூடுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக பிக் பாஸ் வீட்டிற்குள் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி சிறப்பு என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
சூர்யா சேதுபதி தனது முதல்படமான பீனிக்ஸ் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், அவரின் புதிய முயற்சி மிகப் பெரிய கவனத்தை பெற்றது. தற்போது அவர் நடிக்கும் ‘நடு சென்டர்’ என்ற வெப் தொடர் ஜியோ-ஹாட்ஸ்டாரில் டிசம்பர் 20ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
இந்த வெப் தொடரின் ப்ரோமோஷன் காரணமாகவே சூர்யா மற்றும் தொடரில் நடித்துள்ள பலரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இதில் சசிக்குமார் கூடைப்பந்து பயிற்சியாளராக நடித்திருப்பதும் கவனிக்கத்தக்கது. குழுவினர் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் கூடைப்பந்து விளையாடியும், தொடரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.
வீடியோ வெளியாகிய உடன், ரசிகர்கள் சமூக வலைதளங்களில்,“அப்பாவுக்கு பதில் மகன்… Screen presence கூட வேற லெவல்!”,
“சூர்யா செதுபதி வரும் விஷயமே சுறுசுறுப்பு குடுத்துருக்கு!”என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் மேடையில் முதல்முறையாக விஜய் சேதுபதி மகன் தோன்றியிருப்பது, நிகழ்ச்சிக்கும் தனக்குமான பப்ளிசிட்டிக்கும் ஒரு பெரிய பூஸ்ட் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
English Summary
Vijay Sethupathi son arrives at Bigg Boss house Is he a replacement for his father Information revealed