காமராஜர் பிறந்த நாளை தக்காளி வழங்கி கொண்டாடிய விசிக.!!
VCK celebrated Kamaraj birthday by offering tomatoes
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் வரை இன்று விற்பனையானது. ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளியின் விலை 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் மற்றும் விசிக தலைவர் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியரின் நினைவு நாளையொட்டி ஈரோடு விசிக கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி தலைமையிலான கட்சியினர் ஈரோடு ஜி.எஸ் ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதை தொடர்ந்து விசிகவினர் பொதுமக்களுக்கும், அங்கிருந்த பெண்களுக்கும் இனிப்புக்கு பதிலாக தக்காளிகளை வழங்கினர். தமிழகத்தில் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதை உணர்த்தும் வகையில் பொதுமக்களுக்கு தக்காளி வழங்கப்பட்டதாக விசிகவினர் தெரிவித்தனர். அங்கிருந்த பெண்களும் பொது மக்களும் ஆச்சரியத்துடன் தக்காளியை வாங்கிச் சென்றனர்.
English Summary
VCK celebrated Kamaraj birthday by offering tomatoes