வன்னியர் இட ஒதுக்கீடு வெற்றி... திண்ணை பிரச்சாரம், விழிப்புணர்வு என அசத்தும் பாமக நிர்வாகிகள்.! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு கொண்டாட்டம் பாட்டாளி மக்கள் கட்சியினரால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை கிராமங்கள் தோறும் கொண்டாடும் விதமாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸின் திண்ணை பிரச்சாரம் மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும் பாட்டாளி மக்கள் கட்சியினர் பல்வேறு விதங்களில் தங்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தின் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாட்டிய வன்னியர்கள். இதன்போது, இடஓதுக்கீடு நாயகர் மருத்துவர் அய்யா வாழ்க என கோஷமிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். 

இந்த நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், ஒன்றிய தலைவர் பிரபு, மு.ஊராட்சிமன்ற தலைவர் கன்னியப்பன் மு.துலைவர் கார்த்திக் மற்றும் புதுப்பட்டு கிராம வன்னிய மக்களுடன் சிறப்பு அழைப்பாளராக எல்.கே.கார்த்திக்ராசா பங்கேற்றுக்கொண்டார். இதனைப்போன்று, அங்குள்ள 6 ஊர்களில் வெற்றிகொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. 

புவனகிரி சட்டமன்றத் தொகுதி வடக்கு வெள்ளூர் வன்னியர் வீதி கிராமத்தில் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் 40 ஆண்டு காலமாக தொடர்ந்து போராடியும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவருடைய வழிகாட்டுதலின்படி கடந்த டிசம்பர் 1 முதல் ஜனவரி 28 வரை பலகட்ட அறவழிப் போராட்டங்களின் வாயிலாக வன்னியருக்கு 10.5% இடப்பங்கீடு கிடைத்தது. 

இந்த இடப்பங்கீடு வாயிலாக வன்னியர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகளை திண்ணைப் பிரச்சாரம் மூலம் மாநில துணை பொதுச் செயலாளர் முனைவர் த.அசோக்குமார் புரிய வைத்தார். இதனைப்போன்று, தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்தில் பாமக ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமையில் இட ஒதுக்கீடு பெற்றதை கேக் வெட்டி கொண்டாடினர்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanniyar Agitation Protest Victory PMK and Vanniyar Sangam Makes Celebration


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->