பொதுமக்கள் கவனத்திற்கு.. ஆகஸ்ட் 15ம் தேதி வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளது.

இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. 

இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ. 90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ. 50 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் வண்டலூர் பூங்காவுக்கு வாரத்திற்கு ஒருநாள் செவ்வாய்க் கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். இந்த நிலையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15ம் தேதி ) 76வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. எனவே, சுதந்திர தின விடுமுறையையொட்டி ஆகஸ்ட் 15ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vandalur zoological park open on August 15


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->