தளபதி மகனே வருக..!! தமிழருக்கு மேன்மை தருக..!! உதயநிதியை வாழ்த்திய வைரமுத்து..!!
Vairamuthu congratulated Udayanidhi on inauguration as Minister
தமிழ்நாடு அமைச்சராக உதவி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இன்று காலை 9:30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும், திரை துறையினரும், பிரபலங்களும், நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் " உளங்கவர் உதயநிதி.! கலைஞர் குடும்பம் உங்களுக்கு தந்தது அறிமுகம் மட்டும் தான்; இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது; உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்; தளபதி மகனே வருக..!! தமிழருக்கு மேன்மை தருக..!! அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Vairamuthu congratulated Udayanidhi on inauguration as Minister