வைகாசி விசாக திருவிழா... ஜூன் 3-ந்தேதி பழனியில் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
Vaikasi Visakha festival Begins with flag hoisting on June 3rd in Palani
இந்த வருடத்துக்கான வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3-ந் தேதி பழனியில் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்துக்கான வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தங்ககுதிரை, வெள்ளியானை, வெள்ளிமயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி முடிந்த உடன் அன்றைய தினம் இரவு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து வைகாசி விசாகத் தேரோட்டம், மறுநாள் 9-ந் தேதி மாலை நடைபெறும்.
திருவிழா நடக்கும் நாட்களில் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை, வீணை இசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
English Summary
Vaikasi Visakha festival Begins with flag hoisting on June 3rd in Palani