ஹேஷ்டேக் போட்டு தமிழக அரசை பங்கம் செய்த எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal



தொழிலாளர் 12 மணி நேர வேலை, திருமண மண்டபங்களில் மதுபானம், LKG வகுப்பு ரத்து என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தொழிலாளர் திருத்த சட்டத்தில் தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதி வழங்கும் மசோதா திமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து, பள்ளி கல்வி துறையில் LKG வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது. 

இந்த நிர்வாக திறனற்ற அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்" என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் #UTurn_திமுகஅரசு என்ற ஹேஷ்டேக்-யை பயன்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UTurn DMK Govt


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->