நாளை முதல் சென்னையில் பிங்க் பேருந்துகள்.. துவங்கி வைக்கப்போகும் உதயநிதி.! - Seithipunal
Seithipunal


சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கடந்த 2021 ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். கடந்த ஓராண்டில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளின் முன்பக்கம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். 

சில பேருந்துகளில் ஸ்டிக்கர் தூரத்தில் நின்று பார்க்க முடியாத நிலையில் உள்ளது. இன்னும் சில பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது.மாநகர போக்குவரத்து கழகம், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும்  பேருந்துகளை 'பிங்க்' நிறத்தில் மாற்ற முடிவு செய்துள்ளது. 

இதன் மூலம் பெண்கள் குழப்பமின்றி பேருந்துகளை பார்த்து, பின்னர் அதில் ஏறி பயணம் செல்லலாம். 'பிங்க்' நிற பேருந்துகள் சில வழித்தடங்களில் நாளை  தொடங்கப்படவுள்ளது. நாளை முதல் இந்த திட்டம் அமலுக்கு வரவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் சென்னையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் பிங்க் நிற பேருந்துகள் அறிமுகமாகின்றது. முதற்கட்டமாக 60 பேருந்துகளை நாளை திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uthayanithi stalin may start pink Bus For women


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->