இரு மாவட்டங்களை காணும் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் போராட்டம்! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியில் நிர்வாக வசதிகளுக்காக உருவாக்கப்பட்ட உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் கல்வி மாவட்டங்களை ரத்து செய்து அரசாணை வெளியீடு! 

திமுக தலைமையிலான ஸ்டாலின் அரசை கண்டித்து அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினருடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமார் " நிர்வாக வசதிகளுக்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 52 புதிய கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி வளர்ச்சி, திறன் மேம்பாடு, நிர்வாக சீரமைப்பிற்காக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.  மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் குறைகளை தீர்க்க அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி அலுவலர் மற்றும் ஆய்வாளர் ஒருங்கிணைப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் என்ற பெயரில் செயல்பட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 82 மாதிரி பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டது. இதுபோன்ற நிர்வாக ரீதியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

தற்பொழுது அரசாணை எண் 151 வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது மதுரை, மேலூர் ,உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் உருவாக்கப்பட்டது. இதில் குறிப்பாக அதிமுக சட்டமன்ற மன்ற உறுப்பினர்கள் உள்ள உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் கல்வி மாவட்டங்களை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கி வருகிறது. குறிப்பாக குடிமராமத்து திட்டம், இலவசம் மடிக்கணினி, தாலிக்கு தங்கம், இருசக்கர வாகன திட்டம், பரிசு பெட்டகம் திட்டம் ஆகியவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது அரசாணை வெளியிட்டு மதுரை மாவட்டத்தில் மதுரை மற்றும் மேலூர்  கல்வி மாவட்டங்கள் தான் செயல்படும் என்று யாரிடமும் கருத்து கேட்காமல் சர்வாதிகாரப் போக்கோடு திமுக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு என்பது அனைவருக்கும் பொதுவான அரசு பாரபட்சம் பாராமல் திமுக அரசு செயல்பட வேண்டும். மேலும் இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்படும். 

இந்த பிரச்சனையை எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உடன் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கபடும் என செய்தியாளர்களிடம் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.

இப்போராட்டத்தில் அதிமுகவினர் "கவ்வி மாவட்டங்கள் காணவில்லை" என் கோஷமிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Usilampatti and Tirumangalam educational districts are canceled


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal