கோவைக்கு வேலைக்கு வந்த உ.பி வாலிபர்.! முகநூல் காதலியை தேடி பீஹார் சென்ற சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் யாதவ் என்ற வாலிபர் மூன்று மாதத்திற்கு முன்பு அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு கடையில் சமோசா போடும் வேலை தரப்பட்டது. 

இந்த நிலையில், அனுஜ் யாதவ் கடந்த 19-ந் தேதி சம்பளத்தை வாங்கிக்கொண்டு, தன் அம்மாவை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, சென்றுள்ளார். இதையடுத்து கடையின் மேனஜர் ராஜ்குமார் இரண்டு நாட்கள் கழித்து அந்த வாலிபரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். 

ஆனால், செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அந்த வாலிபரின் தாயாருக்கு தொடர்பு கொண்ட போது, தனது மகன் இங்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு சந்தேகமடைந்த கடை மேனேஜர் ராஜ்குமார் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். 

அதன் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து அனுஜ் யாதவை தீவிரமாகத் தேடி வந்தனர். அந்த நேரத்தில் பீகார் மாநிலத்தில் இருந்து போலீசாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், மஞ்சு கர்சியா என்ற இளம் பெண் பேசியுள்ளார்.

அப்போது, அவர் தான் பீகாரில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை பார்த்து வருவதாகவும், கடந்த மூன்று மாதமாக அனுஜ் யாதவும், நானும் முகநூல் மூலமாக காதலித்து வருகிறோம். அதனால் அவர் என்னை தேடி வந்துவிட்டார். 

அதனால், அவரை யாரும் தேட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட போலீசார் பேக்கரி மேனேஜர் ராஜ்குமாரிடம் நடைபெற்ற விவரங்களை கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

up young man went to bihar for search girl friend


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->